5S தகுதி சான்று தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வு

(லியோன்)

5S தகுதி சான்று தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகள் ,தனியார் துறையினர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் தெளிவூட்டும் செயலமர்வு (24) மட்டக்களப்பில் நடைபெற்றது
 

தேசிய உற்பத்தித்திறன் செயலகம் அனுசரணையில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்க பிரதேச செயலாளர் கே . குணநாதன் தலைமையில் அரச திணைக்கள அதிகாரிகள் ,தனியார் துறையினர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு 5S தகுதி சான்று தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

.ஜப்பான் இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக அழிவுக்கு பாத்திரமான போதிலும் பிற்காலத்தில் பாரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்திட முயன்றது .

இதன் பொருட்டு தரம் ,தலைமைத்துவம் மற்றும் குழுசார் செயற்பாடுகள் போன்ற முகாமைத்துவக் கோட்பாடுகளை ஜப்பான் அனைத்து நிறுவனங்களும் கையாண்டனர் .

இதன் மூலம் ஜப்பானில் அனைத்துத் துறைகளிலும் அதி விசேட முன்னேற்றம் ஏற்பட்டன . இதன் போது இவர்கள் கையாண்ட முக்கிய மற்றும் பிரபல்யமான கோட்பாட்டாக 5S எண்ணக்கரு உள்ளது .

உற்பத்தித்திறனின் அடித்தளம் அல்லது அஸ்திவாரனானதும் 5S முகாமைத்துவத்தின் பலம் வாய்ந்த கருவியாக 5S பயன்படுத்தப்படுகின்றது .
இதனை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்பாடு மற்றும் முக்கியத்துவத்திற்கேற்ப  இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் இலங்கையின் சகல நிறுவனங்களிலும்  5S தரமொன்றை ஏற்படுத்தல் பொருட்டு  5S உறுதிப்பாட்டு நிகழ்ச்சி இணை இலங்கையில் முதல் முறையாக நடைமுறைப்படுத்திட திட்டமிட்டுள்ளது .

இது தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வுகள் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்று வருகின்றன ,இதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

இந்த செயலமர்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள் ,தனியார் துறையினர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .


இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு வளவாலர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி பகிரதன் , எல் . ஜீவராணி , கே . சியமாலா ஆகியோர் கலந்துகொண்டனர்