கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்யுங்கள் -கிழக்கு ஆளுனர்

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது நல்ல வேட்பாளர்களை பொதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேசிய வேலை திட்டமான விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம் எனும் இலங்கை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இந்த தேசிய உணவு உற்பத்தி வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன்கீழ் உற்பத்தி கண்காட்சியும் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபையின் விவசாய,கைத்தொழில்,மீன்பிடிதுறை அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதிகளாக முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆறு பேருக்கு விவசாய உற்பத்திகள் மற்றும் கைத்தொழில் புரிவதற்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மாகாணசபைகளுக்குரிய ஆட்சி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும்.13வது திருத்த சட்டமூலத்தின் மூலம் வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படும்போது கிழக்கு மாகாணம் உட்பட போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக அபிவிருத்திசெய்யமுடியும்.

குpழக்கு மாகாணசபையில் கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அமைச்சராக துரைரஜசிங்கம் அவர்களைக்காண்கின்றேன்.அவர் மீண்டும் அமைச்சராக கிழக்கு மாகாணசபைக்கு வருவார் என எதிர்பார்க்கின்றேன்.எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சிறந்த உறுப்பினர்களை தெரிவுசெய்யமுடியும்.

மாகாணசபையில் சிறந்த உறுப்பினர்களை தெரிவுசெய்வதன் மூலமே சிறந்த அறுவடையினை பெறமுடியும்.மாறாக எதனையும் செய்யத்தெரியாதவர்களைத்தொரிவுசெய்து எதனையும் நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலைகளை ஏற்படுத்தகூடாதுஎன்றார்.