அரசியலமைப்பு சீர்திருத்த வழிகாட்டல் குழு பற்றி பேச நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை

(சசி துறையூர் ) அரசியலமைப்பு சீர்திருத்த வழிகாட்டல் குழு பற்றி பேச  நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை என்றாலும் நல்லேண்ணம் கருதியே அமைதி காத்தேன் நான்.

இன்று நான் சொன்னவையே நடந்துள்ளன.  என்னை எவரும் குறை சொல்ல முடியாது.

வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி, மதசார்பின்மை  தொடர்பாக வழிகாட்டல் குழுவில் நிலவும்  யதார்த்தங்கள் பற்றி கடந்த காலங்களில் நான் பகிரங்கமாக கருத்துகள் கூறிய போது, அவை தங்களது பேரம் பேசலை பாதிக்கிறது என கூட்டமைப்பின்  வழிகாட்டல் குழு பிரதிநிதிகள் என்னிடம் கோபித்துக்கொண்டார்கள்.

 வழிகாட்டல் குழு பற்றி பேச  நான் எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை என்றாலும் நல்லேண்ணம் கருதி நான் அமைதி காத்தேன். இன்று நான் சொன்னவையே நடந்துள்ளன. இன்று என்னை எவரும் குறை சொல்ல முடியாது. என்கிறார் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், மனோ கனேசன்.


இலங்கையினுடைய அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் அதன் மூலம் இந்த நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களின்
அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதிகளை நம்பியே  தமிழ் முஸ்லிம் மக்கள் ஆணை வழங்கி மத்தியில் நல்லாட்சி எனும் பெயரில் கூட்டு அரசை நிறுவினர்.

அதனடிப்படையில் நல்லாட்சியில் ஜனாதிபதியினால் புதிய அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் முகமாக
அரசியலமைப்பு சீர்திருத்த பணிகளை ஆரம்பித்து  வைத்ததோடு அந்த வேலைத்திட்டங்களை முறைப்படுத்த வழிநடத்தல் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பல கட்சிகளினுடைய தலைவர்கள் மிக முக்கியமான பாராளுமன்ற பிரதிநிகள் இந்த குழுவில் அங்கத்துவர்களாக நியமிக்கப்பட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -  இந்த வழிநடத்தல் குழுவிற்கு தலைவராகவும்
குறிப்பாக சிறுபான்மை தமிழ் பேசும் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,  கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,
 அமைச்சர் றிசாட்பதியுதின்,
அமைச்சர் ரவூப்ஹக்கீம்  ,
அமைச்சர் மனோகனேசன். மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோருடன் .
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான
நிமல் சிறிபால டி சில்வா,
தினேஷ் குணவர்த்தன,
லக்ஸ்மன் கிாியல்ல,
ஏ.டி.சுசில் பிரேமஐயந்த,
பாட்டலி சம்பிக்க ரணவாக்க,
மலிக்சமரவிக்ரம,
டிலான்பெரேரா,
தினேஸ்குணவர்த்தன,
அனுரதிஸ்ஸாநாயக்க,
விஜயதாசராஜபக்ஸ,
விமல் ரத்நாயக்க,
பிரசண்ண ரணதுங்க,
கலாநிதி. ஜயம்பதி விக்கிரமரத்ண  துஷித்தா விஜயேமான்ன
ஆகியோர் இந்த குழுவில்
நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழிநடத்தல் குழுவினுடைய இடைக்கால அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்தது. இந்த அறிக்கை தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க இந்த வழிநடத்தல் குழுவினுடைய அறிக்கை வருவதற்கே காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனங்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தக்குழுவில் அங்கத்துவம்பெறும்  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் அவர்களிடம் தொடுக்கப்பட்ட வினாக்கள்.

அறிக்கை வருவதற்கே இவ்வளவு கால தாமதம் என்றால்? புதிய சீர்திருத்தம் மாத்திரம் முழுமையாக பூரணமாக விரைவாக கிடைக்குமா?

வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் எத்தகைய  நிலைப்பாட்டில் உள்ளது?

வெளிப்படையாக செயற்பாடுகள்  போதாமல் உள்ளதே? அல்லது வெளிப்படையாக இடம்பெறவில்லையா?
காலவிரயம் ஏற்படுத்தப்படுகிறதே?

இந்த வழி நடத்தல் குழுவில் உங்கள் பங்களிப்பு  எத்தகையது?

வெளிவந்த இடைக்கால அறிக்கை
ஏன் கால தாமதமானது?

என்று இதன் பணி  பூரணமாக நிறைவுபெறும்?


கெளரவ அமைச்சரின் பதில்.

வடக்கு கிழக்கு தொடர்பிலும் முழு நாட்டுக்குமான புதிய அரசியலமைப்பு வரும் வரையில் அது பற்றி பகிரங்கமாக உரையாற்றுவதையோ கருத்துக்கள் வெளியிடுவதோ இப்போது பொருத்தமாக இருக்காது, தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதனை விரும்பவில்லை. அது தாங்கள் பெற உள்ள அதிகார வரம்பை குறைத்து விடும் என அவர்கள் நினைக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

அது தொடர்பாக நான் எதுவும் சொல்ல போய் அதனால்தான் குழம்பி விட்டது என கூட்டமைப்பின் வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும், சுமந்திரனும் என் மீது பழி போட்டுவிடக்கூடாது என்பதால் தான் நான் கவனமாக இருக்கிறேன்.

எப்படியும் அவர்கள் தானே வடக்கு கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவங்கள். எனவே எனக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் அவற்றை இங்கே சொல்ல முடியாது  தயங்குகிறேன். எப்படியும் இன்னமும் இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் முழு வடிவமும் வெளியே பகிரங்கமாகிவிடும். அதுவரை பொறுத்திருங்கள். என அவர் பதில் வழங்கினார்.