வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்

(லியோன்)

சர்வமத அமைப்பு உறுப்பினர்களின் உறவுப்பாலம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது  


கரித்தாஸ் செடெக் கொழும்பு வலையமைப்பின் கீழ் இயங்கும் அனைத்து மறை மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட சர்வமத குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு   மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலமாக அனுராதபுரம்  இகல வெடி யாவ , கல்கிரியா கம , லக்ஸ உயன , மனம்பிடிய ஆகிய பகுதிகளை சேர்ந்த செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடப்பட்டதுடன் ,தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றது ..


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் உறுப்பினர்கள் , அனுராதபுரம் செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்