லயன்ஸ் கழகத்தினால் விசேட தேவையுடையவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

(லியோன்)

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் பல சமூக பணிகளையும் ,அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுத்து வருகின்றது .
.

இதன் கீழ் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் தங்காலை நவஜீவன அமைப்பும் இணைந்து  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான  இலவச  மருத்துவ முகாம் ஒன்றை லயன்ஸ் கழக தலைவர் லயன் எல் ஆர் . டேவிட் தலைமையில் லயன்ஸ் கழக மண்டபத்தில் இன்று நடத்துகின்றது ,

இந்த மருத்துவ முகாமானது இன்று காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணி வரை நடைபெற்றவுள்ளது

இயற்கை அனர்த்தங்கள், யுத்தம் மற்றும் இயற்கையில் உடல் அவயவங்களை இழந்த விசேட தேவையுடையவர்களில் நலன் கருதி அவர்களுக்கான  விசேட  மருத்துவ பரிசோதானைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன  .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் லயன் எல் ஆர் . டேவிட் ,   306  C  மாவட்ட ஆளுநரின் பிரதான இணைப்பாளர் லயன் எ .செல்வேந்திரன் ,மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் , தங்காலை நவஜீவன அமைப்பின் உறுப்பினர்கள் , வைத்தியர்கள் ,  மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடையவர்கள் கலந்து கொண்டனர்.