இளைஞர் சேவை அதிகாரி அமரர் பிரசாந்தி பிரியதர்ஷனின் இறுதிக்கிரிகை இன்று.

அமரர் பிரசாந்தி பிரியதர்ஷனின் இறுதிக்கிரிகை இன்று.

கடந்த 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்த  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர்சேவை அதிகாரி
அமரர் பிரசாந்தி பிரியதர்ஷனின் பூதவுடல்   இன்று செவ்வாய்க்கிழமை (25.07.2017) கல்லடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது,

இளைஞர் யுவதிகளின் அபிவிருத்திக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை  அர்ப்பணிப்புடன்  அர்ப்பணித்து அரும்பாடுபட்டு உழைத்த சிரேஸ்ட இளைஞர் சேவை அதிகாரியான இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு  கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர்
ஒரு பிள்ளையின் தாயாருமாவார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம்
பிரதேச செயலக பிரிவுகளில்  அர்ப்பணிப்புடன் இளைஞர் சேவை புரிந்து இளைஞர்களின் அன்புக்கும் காத்திரமானவர்.

கடந்த சில மாத காலமாக நேயுற்றிருந்த இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இதய அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.