கல்முனை திருகோணமலை தனியார் பேருந்து மீது கல் வீச்சு.

(சசி துறையூர்) கல்முனை திருகோணமலை தனியார் பேருந்து மீது கல் வீச்சு.

இன்று புதன்கிழமை அதிகாலை  கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்மீது சத்துறுக்கொண்டான் பிரதான வீதியில் வைத்து  மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனம்தெரியாத நபரினால் இந்த கல்வீச்சு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன்,தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் எவ்விதபாதிப்புமேற்படவில்லை. இதனால் தொழிலுக்கு செல்லும் பயணிகள் உரிய நேரத்துக்கு பயணத்தை தொடர முடியாது அசெகரியத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.