பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு திடீர் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் விசேட கூட்டம் ஒன்றிலும் பங்குபற்றினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சா ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி ஏறாவூர் மற்றும் ஆரையம்பதி பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்ளவிருந்த நிலையில் அந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.