வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய முத்துச்சப்புர திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முத்துச்சப்புறத்திருவிழா நேற்று இரவு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப்பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகுவிமர்சையாக இடம்பெற்றுவருகின்றது.

இந்த மஹோற்சவப்பெருவிழாவின் நான்காவது தினமான நேற்று இரவு கொக்கட்டிச்சோலை சந்ததியினால் வெகுவிமர்சையாக இந்த நான்காம் நாள் திருவிழா நடைபெற்றது.

இதனையொட்டி மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாமாங்கேஸ்வரர் ஆலயம் வரையில் மேள தாளங்களுடன் மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆடிவர பட்டெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் தம்ப பூஜை நடைபெற்று வசந்த மண்டபம் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து சிவன், பிள்ளையார், முருகப்பெருமான் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துடன் விசேட யாகபூஜையும் நடைபெற்றது.

வெளிவீதி வந்த மூன்று இறைவணும் மூன்று முத்துச்சப்புறங்களில் ஏறி பக்தர்களின் ஆரோகரா கோசங்களுக்கு மத்தியில் அடியார்களுக்கு அருள்பாலத்தார்.

இந்த உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.