குருமண்வெளி அருமிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாவிஷேகம்.

கிழக்கிலங்கையின்  மட்டக்களப்பு  குருமண்வெளிஅருமிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான புணராவர்த்தன
அஷ்ட பந்தன பஞ்ச குண்ட பக்ஷ
பஞ்ச தள இராஜ கோபுர பிரதிஷ்டா
மகா கும்பாபிஷேக குடமுழுக்கு
பெரும் சாந்தி விழா விஞ்ஞாபனம்
கர்மாரம்பம் 2017-06-30ம் திகதி
எண்ணைக்காப்பு 2017-07-03,04ம் திகதிகள்
மகாகும்பாபிஷேகம் 2017-07-05ம் திகதி இடம்பெறும்.
"கடல் சூழ்ந்த திருமகளின் பிறைநுதற்
திலகம் என விளங்குவதும் இந்து மகா
சமூத்திரத்தின் முத்தெனத் திகழ்வதும்
தெய்வேந்திரன் குபேரன் என்போரால்
ஆளப்பெற்றதும் மாணிக்ககங்கை
மகாவலிகங்கைகள் நீருட்ட
செங்கதிர்கள் உணவூட்ட பஞ்ச ஈச்சரங்களையும் தன்கனத்தே கொண்டு
தெட்சணா கயிலாயம் மென்றும் சுவர்ண
பூமி என்றும் சிவபூமியென்றும் போற்றிப்புகளும்
இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டு மாநகாின் தென்பால்
நீர் வளமும் நிலவளமும் 
நிறைந்து எழில் பொழியும் பழம் பெரும் பதியாம் குறுமண்வெளி என்னும் புண்ணிய பதியாகும்" குருமாார் வாழ்ந்து வந்ததால் குருமண்வெளி
என்னும் பெயர் பெற்ற திவ்வியபதியிலே பன்னெடுங்
காலமாக கோயில் கொண்டரருளி
எப்பொருள் விரும்பினரோ அப்பொருள்
பெறுவீர் என்னும் பதிகத்திற்கு அமைவாக
அடியார்களுக்கு வேண்டுதலளித்து
அருள் புரிந்து வரும் இவ்வாலயத்தில் பல்வேறு அற்புங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில்
2000-11-13ம் திகதி நடைபெற்ற
கும்பாபிஷேக தினத்தன்று வானவீதியில் இறைவன்
ஓளிப் பிளம்பாகத் தோன்றி ஆலய
கருவறையில் இறங்கி அமர்ந்து
அருள் காட்சியளித்தார்.அது மட்டுமன்றி
2016-12-27ம் திகதி விநாயக சஷ்டி விரத
காலத்தன்று விநாயக விம்பத்தின்
நெற்றியில் ஓளி தோன்றிய காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும். இவ்வாறு அருளாட்சி
செய்யும்  விநாயகப்பெருமானு
க்கும்  மூஷிகம் பலிபீடம் தம்பம் தம்பப்
பிள்ளையார் சிவலிங்கம் , கெளாி
யம்மன் , நாகதம்பிரான்,வள்ளி
தெய்வானை சமேதமுருகப்பெருமான்
நவக்கிரகதேவர்கள் ,வைரவர்
சண்டேஷ்வரர், பஞ்சதள இராஜ
கோபுரம் இருமணிக்கோபுரங்கள்
யாகசாலை ,வசந்த மண்டம் ஆகியவற்றுக்கு
நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம்ஆனித்திங்கள் 21ம் நாள்
(2017-07-05)அன்று புதன் கிழமை பூவர்பஷ்ச
துவாதசித்திதியும் அனுச நட்சத்திரமும்
சித்தாமிர்த யோகமும் கூடிய சுப நேரத்தில்
காலை 09மணி 08நிமிடம் முதல்
10மணி20நிமிடம் வரையுள்ள சிங்க
இலக்கின சுப மூகூர்த்த வேளை
யில் மகா திருக்குடமுழுக்கு செய்ய
திருவருள் பாலித்துள்ளது.
எனவே அடியார்கள் அனைவரும் தவறாது
வருகை தந்து தொடர்ந்து நடைபெறவுள்ள
யாக கிாியைகளில் கலந்து தாிசித்து
விநாயகப் பெருமானின் அருள் பெறுக.