சிறிசபாரத்தினம் ஞாபகார்த்த கிண்ணம் -கூழாவடி டிஸ்கோ வசம்

அமரர் சிறிசபாரத்தினம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தலைவர் மற்றும் போராளிகளின் நினைவாக அக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஏ மற்றும் பி கழகங்கள் மோதும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

வியாழக்கிழமை ஆரம்பமான சுற்றுப்போட்டியில் 28 கழகங்கள் பங்குகொண்டன.நொக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகமும் சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏ பிரிவும் தெரிவுசெய்யப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் பாதியில் எந்த அணியும் கோல்களைப்பெறாத நிலையில் இடைவேளைக்கு பின்னர் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்று கடை நிமிடத்தில் கூழாவடி டிஸ்கோ அணி வீரரால் ஒரு கோல் பெறப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் தெரிவுசெய்யப்பட்டதுடன் இரண்டாம் இடத்தினை சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏ பிரிவும் மூன்றாம் இடத்தினை சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பி பிரிவும் பெற்றக்கொண்டதுடன் நான்காம் இடத்தினை புன்னைச்சோலை கோப்ரா விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வானது கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் தமிழரசுக்கட்சியி; இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா,செயலாளர் துஷியநந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரைகளும் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.