நிந்தவூரில் தமிழர்களின் காணிகளில் மைதானம் அமைக்கும் முஸ்லிம்கள் -கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் முறைப்பாடு

நிந்தவூரில் மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட தமிழர்களின் காணியில் முஸ்லிம் மக்கள் மைதானம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிந்தவூர் மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து நிந்தவூர் மக்கள் தெரிவிக்கையில்,

“நிந்தவூர் கடற்கரையை அண்டிய பிரதேசத்திலே 2 ஏக்கர் நிலப்பரப்புடைய காணி ஆரம்பகாலம் தொடக்கம் எங்களது மயானத்திற்கென உள்ளது.

2004ஆம் ஆண்டு இந்த மயானம் தொடர்பான பிரச்சினை வந்தபோது அங்குள்ள சகல ஆலயங்களினதும் நிர்வாகிகள் இது தொடர்பாக எழுத்து மூலம் பிரதேச செயலகத்திற்கும், பிரதேசசபைக்கும் அறிவித்திருந்தனர். பின்னர் அது எந்த முடிவுமின்றி கைவிடப்பட்டது.
பின்னர் 3 நாட்களுக்கு முன்னர், மாகாண சுகாதார அமைச்சர் பைசல் காசிமின் நிதி ஒதுக்கீட்டில் எங்களது மயானத்திற்கான காணியூடாக புதிதாக பாதை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக உரிய இடங்களுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வீதியினை செப்பனிடும் பணிகள் தொடர்ந்து வருவதாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பான நிலமையினை அறிவதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீதிக்கான வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளார்.இன்று இந்த நாட்டிலே தமிழ் பேசும் சமூகங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு பொதுவான தீர்வுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் இவ்வாறான மனக்கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தி பிரிவினையை தூண்டுவதற்கு யாரும் முற்படக்கூடாது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துள்ளேன்.

கிழக்கு மாகாணத்திற்குரிய உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச செயலகம், பிரதேச சபைக்கும் தெரியப்படுத்தி இருப்பதாகவும் மேலும் இன்று இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.