விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாட்டில் இலவச சிகிச்சை முகாம்

 (லியோன்)

விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாட்டில் இலவச சிகிச்சை முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தினால் ஏற்பாட்டில் கொழும்பு பட்டக்கண்ணு  புவுன்டேசன் அனுசரணையில்  இலவச சிகிச்சை முகாம் மட்டக்களப்பு மஹாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளன தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த இலவச முகாமில் முள்ளந்தண்டு வலி,  கண் பார்வைக் குறைபாடு, முள்ளந்தண்டு  நோய்களுக்கான இலவச சிகிச்சைகளும்  இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது .  

இதில் 30 ஆண்களுக்கும்  30 பெண்களுக்குமாக 60 பேருக்கு இந்த இலவச சிகிச்சை முகாமில் சிகிச்சைகள்  அளிக்கப்பட்டது

இந்த மருத்துவ முகாமில்  ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ரெயின்கில்ட் இசன்ஸ்ஸியால்  பயிற்றப்பட்ட 20 பேர் கொண்ட குழுவினர் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்தனர் .

அத்தோடு கண்பார்வை குறைந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடி  வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,மட்டக்களப்பு , அம்பாறை  பிரதி பொலிஸ்மா  அதிபர்  டப்ளியு . ஜெ . ஜாகொட  ஆராச்சி .மாவட்ட அரசாங்க அதிபர்  பி.எஸ் .எம் .சாள்ஸ் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா , மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்  எஸ் .யோகராஜா ,மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ,மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .  


இந்நிகழ்வின் போது கொழும்பு  பட்டக்கண்ணு பவுண்டேசன் முகாமைத்துவ பணிப்பாளர் தேசபந்து எஸ் . எ . தியாகராஜா  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .