இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்க்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

(சசி துறையூர்)

இலங்கையின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற அமர்வு  இன்று (25,01,2017) புதன் கிழமை கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


"அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடலுக்கு இளைஞர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட வேண்டும்" எனும் தலைப்பில் இடம் பெற்ற வாத பிரதிவாதத்தின் போதே இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்க்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் , என கோரிக்கை முன்வைத்தார், மட்டக்களப்பு மாவட்ட இளையோர் பாராளுமன்ற  உறுப்பினர் செல்வி சய்னுஜா இன்பநாதன்.

மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக வளாகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட அரங்கில் இடம் பெற்ற நான்காவது இளைஞர் பாராளுமன்ற முதலாவது  அமர்வில் தனது கன்னி உரையில் உரையாற்றுகையில் எமது நாட்டு இளைஞர் சந்ததியினரின் அபிவிருத்திக்கு வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பல முன்மொழிவுகளை முன்வைத்தார்.


காணெளியில் காணலாம். (தொகுக்கப்படாத காணெளி)