விசேட தேவையுடையவர்களுக்கான இசைப்போட்டி

(லியோன்)

விசேட தேவையுடையவர்களுக்கான இசைப்போட்டி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கான இசைப்போட்டி  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

குறித்த போட்டியில் விசேட தேவையுடையவர்களிடம் இருக்கின்ற இசைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் ஊக்குவிப்பு நிகழ்வாக இப்போட்டி நடத்தப்படது .

இதன்போது  பாடல்கள்  , கர்நாடக இசை , மிருதங்கம் , ஓகன் , வயலின் போன்றவற்றுக்கான போட்டிகளாக நடத்தப்பட்டது .

இந்த போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களாக கலாசார அதிகார சபை உறுப்பினர்களான ஒய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் நேசதுரை , அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி  தயாளன் பிரியந்தி , வாகரை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .சுரேந்தர் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில்  அதிதிகளாக  மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .ஜதிஸ்குமார் , நிர்வாக உத்தியோத்தர் திருமதி .நவவதனி சசிதரன் , கிராம நிர்வாக உத்தியோகத்தர் தில்லைநாதன்  , மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  திருமதி . தானியா தனுசாந்த் , திருமதி . சாலினி மதன்குமார் . மற்றும் ஆசிரியர்கள் , விசேட தேவையுடைய மாணவர்கள் கலந்துகொண்டனர் .


இந்த போட்டியில் கலந்துகொண்ட அனைத்து விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கப்பட்டது .