ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலய காணியை அபகரிக்க முயற்சியா?-தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு, ஆரையம்பதி கிழக்கில் தமிழ் மக்களின் எல்லையில் அமைந்துள்ள திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலயம் உரிய வசதிகள் இன்றி ஆலயத்தின் அருகில் வாழும் மக்களால் தங்களால் முடிந்த அளவு பராமரிக்க பட்டு வருகின்றது.

இந்த ஆலத்திற்க்குரிய காணியில் வேலி அமைக்கப்பட்ட போதிலும் காலநிலைமாற்றத்தால் வேலி அழிந்த நிலையில் உள்ளது.

இந் நிலையில் ஆலய வளவிற்க்குள் நுளைந்து சகோதர இனத்தினை சேர்ந்த சிலர் ஆலய வளவினை அளந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதனை கண்ட மக்கள் அவர்களிடம் வினவியபோதுஇது தங்கள் காணி என கூறி சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்த ஆலய நிலத்தினை அபகரிக்க மறைமுகமாக நடக்கும் முயற்சியா என்பது தொடர்பில் சந்தேகிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.