மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பண்பாட்டு பவனியுடன் நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழா

உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம், உழவர் திருநாளில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் பிரமாண்டமான முறையில் முதலாவது தடவையாக  பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.

நேற்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தைப்பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுவரும் நிலையில் விவசாயிகளுக்கு பக்கபலமாகவுள்ள மாடுகளுக்கான மாட்டுப்பொங்கல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தின் அருகில் உள்ள சுற்றுவட்டத்தில் இருந்து பவனி பொங்கல்பொருட்களை சுமந்த மாட்டு வண்டில் பவனி, உழவர் நடனம், கோலாட்டம் மற்றும் இன்னியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டு இசை முழக்கத்துடன் கலாசார பவனி நடைபெற்றது.

பவனி மண்டபத்தை அடைந்ததை தொடர்ந்து வெண் பொங்கல், சக்கரை பொங்கல், அவல் பொங்கல், கற்கண்டு பொங்கல், பணங்கட்டி பொங்கல், மிளகுபொங்கல், ரவை பொங்கல் ஆகிய ஏழு வகையான பொங்களுடன் 17 வகையான பாரம்பரிய பட்சணங்களும் அவ்விடத்திலே தயாரிக்கம் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு  நகரில் முதன் முதலாக நடைபெறும் இந்த பிரமாண்டமான நிகழ்வில் மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள்.
ஏற்பாட்டு  குழுவால் பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளதோடு தமிழர் பாரம்பரியங்களை பறைசாற்றும் அலங்காரங்களும்  இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமிய பண்பாட்டு விழுமிங்கள் நகர்ப்புற மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.