இலண்டனின் பிரபல விஞ்ஞானியின் உடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் முதல் பட்டதாரி என்ற பெருமையினையும் இலண்டனில் பிரசித்திபெற்ற விஞ்ஞானியாகவும் விளங்கிவந்த நிலையில் காலமான ஆரையம்பதியை சேர்ந்த இளையதம்பி புனிதலிங்கம் அவர்களின் உடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு புகழ்சேர்க்கும் வகையில் நுண்ணங்கி உயிரியல் தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளார்.

23-12-2016அன்று இலண்டனில் காலமான ஆரையம்பதியை பிறப்பிடமாககொண்ட இளையதம்பி புனிதலிங்கம் அவர்களின் தகனக்கிரியைகள் நாளை காலை ஆரையம்பதி பொதுமயானத்தில் நடைபெறவுள்ளது.

நாளை காலை அவரின் உடலம் மக்கள் அஞ்சலிக்காக தாமரைக்கேணியில் உள்ள வைத்திய நிபுணர் டாக்டர் சுந்தரேசனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அங்கு நடைபெறவுள்ள இறுதிக்கிரியைகளை தொடர்ந்து ஆரையம்பதி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.