30ஆம்ஆண்டு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுதினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்;று அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சர்ள்ஸ் நி;ர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்;, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்குள்ளானவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதோடு, உயிரிழந்தவர்களின் சாந்திக்காக ஆலயங்களில் விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளை விட பாரியதொரு படுகொலையே கொக்கட்டிச்சோலை படுகொலை  சித்தரிக்கப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு காலம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளால் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நாள் நினைவுகூரப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், புலிகளினால் கட்டப்பட்ட நினைவுதூபி இராணுவத்தினால் அழிப்பட்டதாகவும் அழிக்கப்பட்ட நினைவு தூபியை புனரமைப்பு செய்யாமல், நினைவுச் சின்னமாக வைத்து, இம்முறை அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் முப்பது வருட நீங்காத நினைவும் எப்போதும் மாறாத எம்மவர் துயரும் என்னும் தலைப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் ஒன்றுபட்டு செயலாற்றி உரிமையினை வென்றெடுப்போம் என்னும் தலைப்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கமும் சிறப்புரையாற்றினர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையின் கலாசார குழுவினால் வழங்கப்பட்ட மறப்போமா மனதையிட்டு என்னும் சிறப்பு நினைவு நாடக நாட்டிய நிகழ்வும் நடாத்தப்பட்டது.