கல்வி அமைச்சரக தெரிவு செய்யப்பட்டார் செல்வன் மனோகரன் சுரேஸ்காந்தன்.



(சசி துறையூர்) நான்காவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அகில இலங்கை ரீதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்ட செல்வன் மனோகரன் சுரேஸ்காந்தன் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

நான்காவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல் செயலமர்வு இம்மாதம் 16,17,18 ஆகிய திகதிகளில் பட்டங்கலை இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது இதன்போதே குறித்த தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

செல்வன் மனோகரன் சுரேஸ்காந்தன் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட பட்டதாரி என்பதுடன்
 மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட இவர் 3264 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பதிவுசெய்தவர்.

எதிர்வரும் 25,26ம் திகதிகளில் நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற  முதல் நாள் அமர்வில் உத்தியோக பூர்வமாக பதிவியேற்கவுள்ளார்.


அத்தோடு மட்டக்களப்பு மாவட்டமும் வாக்குப்பதிவில் முதலிடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் போனஸ் ஆசனம் இரண்டு பெறப்பட்டு மட்டக்களப்பு  மாவட்டத்தின் இளைஞர்பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஜந்தாக உள்ளது.

தெரிவு செய்யப்பட்ட ஜந்து பிரதிநிதிகளில் மூவர் ஆண்கள், இருவர் பெண்கள் என்பதும் விசேடமாக குறிப்பிடத்தக்கது.