லைட் ஹவுஸ்கிராமிய கடற்தொழில் அமைப்பின் நிர்வாக தெரிவும், உறுப்பினர்களின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வும்

(லியோன்)

லைட் ஹவுஸ்  கிராமிய கடற்தொழில் அமைப்பின் 2017  ஆண்டுக்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டமும் அமைப்பின் உறுப்பினர்களின் தரம் ஐந்து புலமைப்பரில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வும் மட்டக்களப்பு பாலமீன்மடுவில்  நடைபெற்றது


மட்டக்களப்பு லைட் ஹவுஸ்  கிராமிய கடற்தொழில் அமைப்பின் 2017 ஆண்டுக்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டமும்  லைட் ஹவுஸ் கிராமிய  கடற்தொழில் அமைப்பின் உறுப்பினர்களின் தரம் ஐந்து புலமைப்பரில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வும் கிராமிய கடற்தொழில் அமைப்பின்  தலைவர் கே .பிறேமன் தலைமையில் 16.12.2016  வெள்ளிக்கிழமை பாலமீன்மடு மீனவ தங்குமிட கட்டிடத்தில் நடைபெற்றது 

இதன்போது கடற்தொழில் அமைப்பின் உறுப்பினர்களின் பாடசாலை செல்லும் மாணவர்களில் தரம் ஐந்து புலமைப்பரில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான  பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் ,  மீன் பிடி  தொழிலை செய்து தற்போது சுகயீன காரணமாக தமது தொழிலை செய்ய முடியாத மீனவர்களுக்கு மருத்துவ செலவுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது .

இதேவேளை  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் 23 வருடங்கள் கிராம சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும்  அருமைநாயகம் நேசதுரை கிராம சேவை உத்தியோகத்தரை லைட் ஹவுஸ்  கிராமிய கடற்தொழில் அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்  நடைபெற்றது .


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு கடற்தொழில் பிரிசோதகர் டி .பாலமுகுந்தன் , பாலமீன்மடு கிராம சேவை உத்தியோகத்தர் டி .நதிகா ,மட்டக்களப்பு லைட் ஹவுஸ்  கிராமிய கடற்தொழில் அமைப்பின் நிர்வாக அங்கத்தவர்கள், மீனவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் அவர்களின்  பிள்ளைகளும் கலந்துகொண்டனர்