ஈழத்த திருச்செந்தூர் ஆலயத்தில் நாளை முதன்முறையாக சூரசம்ஹார நிகழ்வு

கந்த சஸ்டியை முன்னிட்டு நாளை சனிக்கிழமை ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் முதன்முறையாக நாளை சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சூரன் சிலை இன்று ஆலயத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சுவிஸில் வதியும் இருதயபுரத்தினை சேர்ந்த கிஸாந்தன் என்பவரின் நிதியுதவியுடன் இந்த சூரன் சிலை வழங்கப்பட்டுள்ளது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

பண்டைய பண்பாட்டு வழுமியங்களைக்கொண்டதாக ஆலயத்தின் உற்சவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை காலமும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறாத நிலையிலேயே விரதம் அனுஸ்;டிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் இன்று வழங்கப்பட்டுள்ள சூரன் சிலையைக்கொண்டு நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு சூரசம்ஹார நிகழ்வு நடாத்தப்படவுள்ளதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.