நிலைமாறு கால நீதிக்கான வலைப்பின்னலை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம்

(லியோன்)

நிலைமாறு கால நீதி நிகழ்ச்சித் திட்டத்திம் தொடர்பான சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது.
நிலைமாறு கால நீதி நிகழ்ச்சித் திட்டத்தின் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் சமூக அமைப்புக்களை இணைத்து நிலைமாறு கால நீதிதிக்கான  நிகழ்ச்சி திட்டத்தின் வலைப்பின்னலை உருவாக்கும் நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் செயல்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரச சாரா தொண்டு நிறுவனங்களின் – இணையம்  அனுசரணையுடன் கலந்துரையாடல்  நிகழ்வு 19.10.2016 புதன்கிழமை  மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது .

இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில்  நிலைமாறு கால நீதி தொடர்பாக சமூக மட்டத்திலும்  இன்றைய கால கட்டத்தில் மீள் இணக்கத்திற்கான பொறிமுறைகள்  , நிலையான சமாதானமான சமூகத்தினை இணைக்கும் சமூக வலைப்பின்னல்  என்பவற்றின்மு க்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .


இந்த கலந்துரையாடலில்  நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் கொழும்பு சட்டத்தரணிகள் LST  அமைப்பின் சட்டத்தரணிகளான  கே . ஐங்கரன் , செல்வி .சப்ரா  மற்றும் செயலமர்வில்  மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின்  சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர்