புதிய சுயதொழில் திட்டங்களை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பாக திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

 (லியோன்)

பயங்கரவாத
 வன்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  புதிய  சுயதொழில் திட்டங்களை  வழங்குதல்  மற்றும்  ஊக்குவித்தல் தொடர்பாக   திணைக்கள அதிகாரிகளுடனான   கலந்துரையாடல்   இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது .


 பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடைய தொடர்புடைய செயல்களில் பாதிக்கப்பட்ட மீள்க்குடியமத்தப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழில் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் புனர்வாழ்வு அதிகார சபை செயல்திட்ட பணிப்பாளர்  புலேந்திரன்  தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு   பிரதேச செயலக  டேபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது .

 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த சமூக மயப்படுத்தப்பட்ட  பயிலுனர்களுக்கான கடன் திட்டம் மீண்டும் ஆரம்பிக்க படவேண்டியதை பாராளுமன்றத்தின் நல்லிணக்கம் , வடகிழக்கு புனர்நிர்மாணம் ஆகிய துறைகளுக்கான மேற்பார்வைக்குழு , நிதி அமைச்சு பொது முயற்சிகள் அமைச்சு , இலங்கை மத்திய வங்கி ,இலங்கை வங்கி மக்கள் வங்கி ஆகியவை  பூர்வமான ஒத்துழைப்பு வழங்கி  வருகின்ற நிலையில் பயங்கரவாத  வன்செயல்கள்  மற்றும் அதனுடன்   தொடர்புடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  புனர்வாழ்வு  அதிகாரசபையினால் அமுல்படுத்தப்பட்டுவரும்  சுயதொழில்  கடந்திட்டத்தின்  கீழ் புதிய  பல்வேறு  சுயதொழில்  திட்டங்களை கண்டறிதல் மற்றும்  ஊக்குவித்தல்  தொடர்பாக  மட்டக்களப்பு  மாவட்டத்தில்  உள்ள திணைக்கள  அதிகாரிகளுடனான  ஆலோசனைகள்  பெரும்  நோக்கில் இந்த கலந்துரையாடல்   நிகழ்வு  நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ் .நெடுஞ்செழியன் , பிரதேச செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் ,அரசசார்பற்ற தொண்டு நிறுவன பிரதிநிதிகள் , இலங்கை வங்கி முகாமையாளர்கள் , என பலர் கலந்துகொண்டனர் .