தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின் 208 வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது .

(லியோன்)

மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலய  வருடாந்த திருவிழா  கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின்  208 வது  வருடாந்த திருவிழாக்  கூட்டுத் திருப்பலியை  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை   தலைமையில்  பங்குதந்தை அருட்பணி  ரமேஷ் கிறிஸ்டி   ,யேசுசபை துறவி அருட்பணி சகாயநாதன்  ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர் .

ஆலயத்தின் வருடாந்த திருவிழா  கடந்த 07.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு  பங்குதந்தை  அருட்பணி    ரமேஷ் கிறிஸ்டி   தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  

ஆலய திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும்,  பிராத்தனைகளுடன் திருப்பலிகளும்  இடம்பெற்றது .

14 .10.2016  சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு  விசேட  நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து   புனிதரின்  திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .

திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.30 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்  ஆண்டகை   தலைமையில்   ஒப்புகொடுக்கப்பட்டதுடன்   திருப்பலியின்  பின் புனிதரின்  திருச்சுருவ  பவணியும்  தொடர்ந்து ஆலய திருநாள் கொடியிறக்கத்துடன் ஆலய  வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .

இன்று இடம்பெற்ற  திருவிழா திருப்பலியில் சோமஸ்கன் சபை அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , சிறிய குருமட மாணவர்கள் , பங்கு மக்கள் என பலர் திருப்பலியில் கலந்து சிறப்பித்தனர் .