புனித மிக்கேல் கல்லூரியின் சாரணியரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் சிறப்பு சைக்கிள் பவனி

(லியோன்)
புனித மிக்கேல் கல்லூரியின் சாரணியரின்  நூற்றாண்டை  சிறப்பிக்கும் சிறப்பு சைக்கள் பவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் சாரணிய  நூற்றாண்டை சிறப்பிக்கும் முகமாக  புனித கல்லூரி  முன்னால் ஆசிரியரும் மாவட்ட முன்னாள் சாரண ஆணையாளருமான  அ . இருதயநாதன் தலைமையில் சிறப்பு  சைக்கள் பவனி மட்டக்களப்பில் நடத்தப்பட்டது  

இந்நிகழ்வானது சமூகத்தையும்  சமூக சேவையினையும் ஒன்றிணைக்கும்  நோக்குடன்  கல்லூரி பழையமாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , மற்றும் கல்லூரி சமூகத்தின் ஒத்துழைப்புடன்  ஆரம்பிக்கப்பட்ட  இந்த நிகழ்வு நேற்று (16 ) மாலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஆயித்தியமலை வரை சென்று அங்கு இடம்பெற்ற பயிற்சி பட்டறைகளின்  பின் மீண்டும் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரை வந்தடைந்தனர் 

இவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தினேஷ்  கருணாநாயக  மற்றும் கல்லூரி பழையமாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ,  கல்லூரி சமூகத்தினர்  என பலர் கலந்துகொண்டனர் .