சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலத்தில் சிறப்பு நிகழ்வுகள்

(லியோன்)

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில்  சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக  சர்வதேச எழுத்தறிவு தினத்தை வாரமா பிரகடனப்படுத்தப்பட்டு   நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் “எழுத்தறிவை தொடராக விருத்தி செய்வோம் “ எனும் தொனிப்பொருளில் எழுத்தறிவு தொடர்பான பதாகைகள் காட்சிப்படுத்தல் , சிரமதானம் ,எழுத்து ,வாசிப்பு ,பேச்சி , கட்டுரை , நாடகம் கவிதை ,நடனம் ,ஓவியம் போன்ற பொருத்தமான போட்டிகளை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . 

இதற்கு அமைவாக ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  ஊறணி சரஸ்வதி வித்தியாலத்தில் சிறப்பு நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம் .யோகானந்தராஜா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று  நடைபெற்றது .


இதன் போது மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு கட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன்  மற்றும் பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர் .