பிள்ளைகளின் ஆளுமையையும் ,ஆற்றலையும் அனுபவ ரீதியாக விருத்தி செய்தல் தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வு

(லியோன்)

கிழக்குமாகாண கல்வி அமைச்சு மற்றும் பாலர் பாடசாலை கல்விப் பணியக அனுசரணையில்  யுனிசெப் நிறுவன நிதி உதவியுடன்  சமூக இணைக்கப்பாட்டு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
சமூக இணக்கப்பாட்டு சாதனங்கள் பயன்படுத்துவதன் ஊடாக மாணவர்களை கற்றல் செயற்பாடுகளில் ஒருங்கிணைத்தலின் பாடசாலைக்கு மாணவர்களின் வரவை அதிகரித்தல் , பிள்ளைகளின் ஆளுமையையும் ,ஆற்றலையும் அனுபவ ரீதியாக விருத்தி செய்தல் தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வாக இடம்பெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில்   பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் நன்னடத்தை  உத்தியோகத்தர்கள் , பாலர் பாடசாலைக் கல்விப் பணியக உத்தியோகத்தர்கள் ,முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சமூக இணைக்கப்பாட்டு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான ஒருநாள்  பயிற்சியாக  கிழக்குமாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .


இந்த செயலமர்வில் மாவட்ட செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி .முரளிதரன் ,பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் நன்னடத்தை  உத்தியோகத்தர்கள் , பாலர் பாடசாலைக் கல்விப் பணியக உத்தியோகத்தர்கள் ,முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வளவாளராக திருமதி குகநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்