காந்தி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கேதார ஈஸ்வரர் ஆலயத்தின் பாற்குட பவனியும் சங்காபிசேகமும்

(லியோன்)

மட்டக்களப்பு காந்தி கிராமம்  அருள்மிகு ஸ்ரீ கேதார ஈஸ்வரர்  ஆலயத்தின் பாற்குட பவனியும் சங்காபிசேகமும் இன்று நடைபெற்றது

 மட்டக்களப்பு மாவட்டத்தின் காந்தி கிராமம்  அருள்மிகு ஸ்ரீ கேதார ஈஸ்வரர்  ஆலயத்தின் கும்பாபிசேக பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும் இன்று (09) சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை கொத்துகுலத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மாபெரும் பால் குட பவனி ஆரம்பமானது

காவடியாட்டம் சகிதம் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடங்களை தாங்கியவாறு இந்த பால்குட பவனியில் கலந்துகொண்டனர்.

பால்குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும் ஆலயத்தினை  அடியார்கள் கொண்டுசென்ற பால் மூலமூர்த்தியாகிய கேதார ஈஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் 108சங்காபிஷேக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக கேதார ஈஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.


இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்