இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது பேராளர் மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றது (VIDEO & PHOTOS)

(லியோன்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேராளர் மாநாடு  மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது

 “சட்டவாட்சியை உறுதிப்படுத்தவும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும்” எனும் தொனிப்பொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது பேராளர் மாநாடு சங்கத்தின் தலைவர் எஸ் . பிரியந்த பர்ணாந்து தலைமையில் இன்று (08) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜன  கல்லூரி பிரதான மண்டபத்தில்   நடைபெற்றது   
 அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற இந்த மாநாட்டில் ஆசிரியர்களினதும் , கல்வித்துரையினதும் , பொதுமக்களினதும் பிரச்சினைகளையும் மற்றும் நாட்டின் சமகால பிரச்சினைகளையும் ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்க்கும் மாகாநாடாகவும் , 2016, 2017 ஆண்டுக்கான தலைவர் , செயலாளர் , பொருளாளர் தெரிவு செய்யும் நிருவாக தெரிவு கூட்டமாகவும் நடைபெற்றது.    

கடந்த 59 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த நிலையில்  இலங்கை ஆசிரியர்  சங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடைவையாக இந்த  மாகாநாட்டை  இன்று மட்டக்களப்பு நகரில் நடத்தியது

மாகாநாட்டின் போது இலங்கை ஆசிரியர் சாங்கத்தின் தலைவர் .எஸ் . பிரியந்த பர்ணாந்து,,பொது செயலாளர் ஜோசெப் ஸ்டேன்லி ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றது .

மட்டக்களப்பில் இடம்பெற்ற  இந்த மாகாநாட்டை  சிறப்பிக்கும் வகையிலும்   மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம்  படுத்தும் வகையிலும்  ஆசிரியர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,மெதடிஸ்த கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமான  பிரின்ஸ் காசிநாதன் கௌரவிக்கப்பட்டார் .  


இந்த மாகாநாடு நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர் .