“பாடுமீன்கள் சமரில்” மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான 'பாடுமீன்கள் சமரில்' மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றிபெற்று இந்த  ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இப்போட்டியானது நேற்று 05.05.2016ம் திகதி கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி 23.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை வெற்றி இலக்கான 113 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் சிறந்த வீரராக மெதடிஸ்த மத்திய கல்லூரி வீரர் அபிஷேக்(43 ஓட்டங்கள்) தெரிவுசெய்யப்பட்டார். போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக புனித மைக்கேல் கல்லூரி வீரர் பிரசன்னாவும்(28 ஓட்டங்கள்), சிறந்த பந்து வீச்சாளர்களாக மெதடிஸ்த மத்திய கல்லூரி வீரர் தனுசாந்தும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்ப்பட்டது.