மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்கள் மாகான மட்ட கரம் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர் ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய்
பாரதி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   பாடசாலைகளுக்கிடையிலும்   மாகாண மட்டத்திலும் நடத்தப்பட்ட கரம் போட்டிகளில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி ஜெ . ரதீந்திரகுமார் தலைமையில் இன்று பாடசாலையில் இடம்பெற்றது .

2016 ஆம் ஆண்டு வலய மட்ட பாடசாலைக்கிடையிலும் , மாகாண மட்ட பாடசாலைக்கிடையிலும்  நடத்தப்பட்ட கரம் போட்டியில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தின்   15 வயதுகுற்பட்ட மாணவர்களும்  ,     19 வயதுகுற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு 2016ஆம் ஆண்டு  மாகாண மட்டத்தில்   ஜம்பியன் ஆனார்கள்  .

இப்பாடசாலையானது  மட்டக்களப்பு நகரத்தை அண்டிய ஒரு கிராம புற பாடசாலையாகும் . இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்ற குடும்ப மாணவர்கள் ஆவர் .

இவர்களை  பல சாவால்களின் மத்தியில் கல்வி கற்றுக்கொண்டு பாடசாலை அதிபர் .திருமதி ஜெ . ரதீந்திரகுமார் .உடல் கல்வி ஆசிரியர் திருமதி எஸ் . அரியதாஸ் ஆகியோரின் வழிகாட்டலில் மற்றும்  பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோரின் ஒத்துழைப்புடன்  இவ்வாறான போட்டிகளில் பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்
இவ்வாறான நிலையில் பாடசாலைக்கும் தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்த  இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில்   ஆசிரியர் ஆலோசகர்கள்,  பாடசாலை ஆசிரியர்கள்  , பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .