செம்பு நடனத்தில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பெரியபோரதீவு மாணவிகள்

மட்டக்களப்பு,பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவிகள் உள்ளக அலுவல்கள்,வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அரச நடன மற்றும் நாட்டிய நாடக ஆலோசனை சபையால் நடாத்தப்பட்ட அரச நடன போட்டித் தொடரில் தேசியமட்டத்தில் சிரேஷ்ட பிரிவின் கிழ் செம்பு நடனப் போட்டியில் முதலாம் இடத்தில் வெற்றியீட்டி மாகாணத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களுக்கும், ஆசிரியர்.திருமதி.மலர்விழி.ரவிச்சந்திரன் அதிபர்.திரு.க.இராஜகுமாரன் அவர்கட்கும். கடந்த 29ஃ04ஃ2016 அன்று கொழும்பு நெலும் பொக்கன(தாமரை தடாகம்)கலையரங்கில் கௌரவ.அமைச்சர் ளு.டீ.நாவின்ன தலைமையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் போரதீவுப்பற்று கோட்டத்திற்கும் பெரியபோரதீவு கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.