அதிக வெப்ப காலநிலையினால் சர்பத்துக்கடையில் குவியும் மக்கள் - நல்லம் என்கின்றனர் வைத்தியர்கள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் உஷ்ணமான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்பத்துக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெருமளவில் சர்பத்துக்கடைகளை நாடிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இதன்காரணமாக சர்பத்து விற்பனை அதிகரித்துள்ளதாகவும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் சர்பத்துக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான உஷ்ணமான காலநிலை நிலவுவதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்தவேண்டும் என்பதுடன் இவ்வாறான சர்பத்துகள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது சிறந்தது என களுவாஞ்சிகுடியின் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அதிகரித்துச்செல்லும் வெப்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் உடல்நிலையை தயார்படுத்தலுக்காக இவ்வாறான பாணங்களை அருந்துவது நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் சர்பத்துகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறக்கலவைகள் மட்டுமே கலக்கப்படுது பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.