மட்டுநகரில் கிரிக்கட் வீரர்களை உருவாக்கி சாதனை படைப்போம்



இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 19 வயதிற்குட்பட்ட பாடசலை மட்டத்திலான மகானங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்த கொண்டோரை கௌரவிக்கும் நிகழ்வு 06.05.2016  இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.


இந்நிகழ்வை இந்துக்கல்லூரி ஏற்பாடு செய்து நடாத்தியது.

\இந்நிகழ்வில் கிழக்கு மாகான கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய செல்வன்.தேனுரதன், போட்டிகளில் கலந்த கொண்ட செல்வன்.சாருகன், பாடசாலை மட்ட பயிற்றுவிப்பாளர் திரு.ஜவ்வனன், மாவட்ட மட்ட பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் மற்றும் அவ்வணியை ஒழுங்கமைத்து அழைத்துச்சென்ற மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளார் திரு.பிரதீபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
               
அத்துடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினரால் இந்துக்கல்லூரி கிரிக்கெட் அணியினருக்கு கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கி வைக்கட்டது.

பாடசாலைக்கான உபகரனங்களை அதிபா திரு.அருள்பிரகசத்திடமும்;, பயிற்றுவிப்பாளருக்கான உபகரனங்களை இந்துக்கல்லூரி பயி;றுவிப்பாளர் திரு.ஜவ்வனனிடமும் கோட்டைமுனை விளையாட்டு கழக மூத்த உறுப்பினர்களான திரு.சிவநாதன் அவர்களாலும், திரு.வசீகரன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் 1970ம் ஆண்டுகளில் கோட்டைமுனை மகாவித்தியாலத்தில் கல்வி கற்ற போது தான் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தை தாங்கள் தான் உருவக்கியதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரான திரு.சிவநாதன்   நினைவு கூர்ந்தர்.

அதிபர் தனதுரையில் கோட்டைமுனை விளையாட்டு கழகம் தங்களுக்கு ஆற்றிவரும் சேவை மதிப்பிட முடியாதது எனக்கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளார் திரு.பிரதீபன் தனதுரையில் செல்வன்.தேனுரதன் ஒரு சிறந்த வீரர் என கிழக்கு மாகான கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் நிரோசன் பண்டாரதிலக்க குறிப்பிட்டதாக கூறியதுடன் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினரால் தேனுஜனுக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் கழகங்களில் ஒன்றன டீடழழஅகநைடன ஊசiஉமநவ ஊடரடி கழகத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த லண்டன் கோட்டைமுனை கழகத்திற்கும் தன் பாராட்டையும் வாழத்துக்களையும் தெரிவித்தார்