நாள் ஒன்றுக்கு இருபது பேர் மரணிக்கின்றார்கள் அதில் எட்டு பேர் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் ( VIDEO & PHOTOS )

 (லியோன்)

நாள் ஒன்றுக்கு இருபது பேர் மரணிக்கின்றார்கள் அதில் எட்டு பேர் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் என வைத்திய அறிக்கைகள் தெரிவிப்பதாக சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தின நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர்  வி. தவராசா தெரிவித்தார் .

சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது .

மே31ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி வரை இந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது . .

இதன் கீழ்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு மற்றும் இருதயபுரம் மத்தி வாழ்வின் எழுச்சி சமுர்த்தி  வங்கிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணிகள் பிரதேச செயலாளர் வி. தவராசா  தலைமையில் இன்று 31.05.2016 நடத்தப்பட்டது .


 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராசா  தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி இருதயபுரம் மத்தி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி  வரை இடம்பெற்றது. 

இதனை தொடர்ந்து இருதயபுரம் கிழக்கு  வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகத்தர்களினால்  ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி  இருதயபுரம் கிழக்கு வங்கி முன்றலில்  ஆரம்பித்து  வைக்கப்பட்டது .

இந்த பேரணியானது  வங்கி  முன்றலில் இருந்து ஆரம்பமாகி  ஸ்ரீ குமாரத்தன் ஆலய வீதி ஊடாக இருதயபுரம் மணிகூண்டு சாந்தி  வரை சென்று மீண்டும் வங்கி வரை  பேரணியாக சென்று நிறைவுற்றது .


இடம்பெற்ற சர்வதேச புகைத்தல்  எதிர்ப்பு நிகழ்வில் புகைத்தலற்ற ,  வளமான புதியதோர் சமுதாயத்தை உருவாக்குவோம் ,  சிகரட் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை நமது நாட்டின்அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் , புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம் ,ஒழுக்க நெறி நிறைந்த சுபீட்சமான கிராமத்தை கட்டி எழுப்புவோம் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை  பேரணியில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.

இதன்போது சர்தேச புகைத்தல் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கொடி விற்பனையும் இடம்பெற்றது .

இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய  பிரதேச செயலாளர் உரையாற்றும் போது தெரிவிக்கையில் சமுர்த்தி , வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஆண்டு தோறும் மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரங்களுக்கு சர்வதேச புகைத்தல் , மது எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர் .

அதனூடாக கிடைக்கப்படுகின்ற நிதியில் இருந்து புகைத்தல் ,மதுவில் இருந்து விடுபடுவதற்கும் , அதேபோல் இந்த பகுதியில் வாழ்கின்ற  வரிய மக்களின் வாழ்வாதாரம் ,கல்வி ,சுகாதாரம் போன்ற செலவுகளுக்கு  இந்த நிதியை பயன்படுத்தி ஆண்டு தோறும் செயல்படுத்தி வருகின்றன .

இந்த புகைத்தல் . மது என்பது மனிதனுடைய உயிரை எடுக்கின்றது , இது தீர்க்க முடியாத நோய்களை உருவாக்கின்றது .

இன்று கிடைத்த தகவலுக்கு அமைய நாள் ஒன்றுக்கு இருபது பேர் மரணிக்கின்றார்கள் அதில் எட்டு பேர் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் என வைத்திய அறிக்கைகளில் சுட்டிகாட்டப்படுகின்றன .

ஆகவே இந்த கொடுமையான விடயத்தில் இருந்து இந்த சமுதாயம் விழிப்படைகின்ற பொழுது தான் இந்த சமுதாயத்திலே வாழ்க்கை , வாழ்க்கை தரம் ,கல்வி ,பொருளாதாரம்  உயர முடியும் .
இதனால் சமுதாய வளர்ச்சிக்கு இதனை விடுத்து செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது . இந்த கொடி தினம் தொடர்பாக நிதி சேகரிக்கின்ற வேளையிலே பொதுமக்கள் மத்தியிலே  இருக்கின்றது .

இது தொடர்பாக முறைப்பாடுகளை எழுதி மேல் இடங்களுக்கு அனுப்புகின்றார்கள் . இந்த நிதியில் இருந்து ஒரு ரூபா ஏனும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தங்களுடைய தேவைகளுக்கு எடுப்பதில்லை . சமுர்த்தி , வாழ்வின் எழுச்சி திணைக்களமும் தங்களுக்காக எடுத்துக்கொள்வதில்லை , அரசாங்க வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை,

இந்த நிதி முழுக்க இந்த சமுதாயத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது . ஒரு கிராமத்தில் ஒரு இலட்சம் ரூபா நிதியாக சேகரித்தால் அந்த நிதியில்  80ஆயிரம்  ரூபா நிதி  அந்த கிராமத்திற்கு செலவிடப்படுகின்றது .

அந்த நிதியானது  பாடசாலை மாணவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள் , பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளுக்கான  துவிச்சக்கர வண்டி கொள்வனவு செய்வதற்கு  ,  தீராத நோய்களுக்கான கொடுப்பனவாக , வீடுகளை திருத்துவதற்கான கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றது .

இவ்வாறாக இந்த நிதி பல்வேறுபட்ட சமுதாய தேவைகளுக்காக பயன்படுத்த படுகின்றது .  கடந்த ஆண்டிலும் சேகரிக்கப்பட்ட நிதியிலே 80 வீதமான நிதி  சமுதாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது .

இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் . எனவே இவ்வாறு சமுதாய தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற இந்த நிதிக்கு நிச்சயமாக பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் ..