மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுனர்களின் செயல்திட்டம் கையளிப்பு நிகழ்வு


(லியோ)

தேசியக் கல்விக் கல்லூரி கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுனர்களின் செயல்திட்டம்  கையளிப்பு நிகழ்வும், சஞ்சிகை வெளியீடும்  இன்று மட்டக்களப்பில்  இடம்பெற்றது .

 கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுனர்களின்  செயல்திட்டங்கள்  நாடளாவிய ரீதியில்  பாடசாலை மட்டத்தில்   ஒரு வருட கால கற்பித்தல் பயிற்சியின் பின்  செயல்திட்டங்களை  பாடசாலைகளுக்கு  கையளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .

இதன் கீழ்  மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுனர்களின்  ஒரு வருட கால கற்பித்தல் பயிற்சி  செயல்திட்டம்  மட்டக்களப்பு மகாஜன  கல்லூரியில் செயற்படுத்தப்பட்டு அவற்றினை கல்லூரிக்கு கையளிப்பு நிகழ்வும், ஆசிரியப் பயிலுனர்களின்  கலை கதம்பம் என்ற  சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும்  கல்லூரி அதிபர் திருமதி .நே . துரைராஜசிங்கம் தலைமையில்  கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது .

இன்று மகாஜன கல்லூரிக்கு கையளிக்கப்பட்ட செயல்திட்டத்தில் பூந்தோட்டம் அமைத்தல்,கலைநிலை மிக்க கர்நாடக சங்கீத மாதிரி வகுப்பறைகள் உருவாக்குதல் ,சூழல் மாசடைவை தடுத்து பசுமையான சூழலை உருவாக்கல் , பாடசாலை  அமைப்பின் வரைபடம் , மாணவர்களின் தகவல் தேடல்கள்   போன்ற  செயல்திட்டங்கள்   கையளிக்கப்பட்டன  .  

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு தேசியகல்விக் கல்லூரி பீடாதிபதி எஸ் . இராஜேந்திரன் , சிறப்பு அதிதிகளாக   மட்டக்களப்பு தேசியகல்விக் கல்லூரி உப பீடாதிபதிகளான எஸ் . ஜெயக்குமார் , எம் .சி . யுனைட், கௌரவ அதிதிகளாக  மட்டக்களப்பு தேசியகல்விக் கல்லூரி நிதியும்  நிர்வாகமும் இணைப்பாளர்  ஏ.எம் . நியாஸ் , பொறுப்பு விரிவுரையாளர் .எம் . எல் . ஏ. வாஜித் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ,கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஆசிரியப் பயிலுனர்களின் கலை கதம்பம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .