புற்று நோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரம்

(லியோ)

புற்று நோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரத்தின் ஆரம்ப நிகழ்வு கொடிகள் விற்பனையும் இன்று இடம்பெற்றது .
இலங்கை புற்று நோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரத்தின் ஆரம்ப நிகழ்வும் கொடி விற்பனையும் சங்கத்தின் தலைவரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளருமான எந்திரி .வை . தர்மரட்ணம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி டி . ஜெயசிங்கம் , கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .எஸ் .கிரிதரன் , மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் .கே .பாஸ்கரன் மற்றும்  இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் ,  வைத்திய அதிகாரிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,புத்திஜீவிகள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

இலங்கை புற்று நோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கொடிவாரமானது 09.05.2016  ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும்  16.05.2016  ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது . 


இந்த கொடிவார காலப்பகுதியில்  புற்று நோயில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் , புற்று நோயாளிகளை தர்சிப்பது , புற்று நோய் சிகிச்சை நிலையங்களுக்கு உதவிகள் வழங்குதல் , வறிய புற்று நோயாளரின் சிகிச்சைக்கான உதவிகள் வழங்கல் போன்ற பல்வேறு விடயங்கள் இந்த கொடிவாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது என சங்கத்தின் தலைவரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளருமான எந்திரி .வை . தர்மரட்ணம் தெரிவித்தார் .