பொருளாதார ரீதியில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாக - அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

(லியோ)

இலங்கையில்  பொருளாதார ரீதியில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாக இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில்   பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது மாவட்ட அரசாங்க அதிபர்  இவ்வாறு தெரிவித்தார்.
 இலங்கை வங்கி   சித்திரை புத்தாண்டை முன்னிட்டு   மித்துரு அபிவிருத்தி சங்க  அங்கத்தவர்களின் சிறுகைத்தொழில் உற்பத்தி பொருட்களின் விற்பனையும்  கண்காட்சியும் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வு  இலங்கை வங்கி பிரதி  பொது முகாமையாளர்  கே . இ . டி . சுமணசிறி தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி. எஸ். எம் . சார்ள்ஸ்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி  மைதானத்தில்   ஆரம்பித்து வைத்தார் .

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள  மித்துரு அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனையும் ,கண்காட்சியும் இன்று வெள்ளிக்கிழமை 08ஆம் திகதி  முதல்  09  ஆம் மற்றும் 10ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை 09.00 மணி முதல்  மாலை 08.00 மணி வரை  மட்டக்களப்பு இந்து கல்லூரி  மைதானத்தில் இடம்பெறவுள்ளது .

இன்றைய முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மட்டக்களப்பு இந்து கல்லூரி  மைதானத்தில்   ஆரம்பித்து  வைத்த  சிறுகைத்தொழில் உற்பத்தி பொருட்களின் விற்பனையும்  கண்காட்சியும் நிகழ்வில் உரையாற்றிய  மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கயில்



மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில்  பொருளாதார ரீதியில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கின்ற மாவட்டம் .

இந்த மாவட்டத்தில் 29 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள்  விதவைகளாக இருகின்றார்கள் .

நான்காயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் விசேட தேவையுடையவர்களாக  இருக்கின்றார்கள் .

அதேபோன்று கைவிடப்பட்ட குடும்பங்கள் என்று சொல்லுகின்ற போது அதனுடைய கணக்கீடுகள் சரியாக இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் நான்காயிரம் பேர் இங்கு இருக்கின்றார்கள் ,

எனவே இப்படியான பல்வேறு குறைபாடுகளோடு மாவட்ட எல்லைப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வறுமை மிக்க குடும்பங்கள் தங்களுடைய நாளாந்த வாழ்வாதாரத்திற்காகவும் ,செயல்பாடுகளுக்காகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .

எனவே இவர்களை எல்லாம் நாங்கள் அவர்களுடைய பொருளாதார நிலைமையிலே முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் மிக முக்கியமாக மூன்று  சவால்களை நாங்கள் எதிர் நோக்கிகொண்டிருக்கின்றோம் .

ஒன்று அதிக வட்டியிலே மக்களுடைய பணத்தையும் ,அவர்களுடைய உழைப்பையும் சுரண்டி கொண்டிருக்கின்ற நுண்கடன் வழங்குகின்ற நிறுவனங்களின் செயல்பாடுகள்.



இரண்டவதாக கிராம புறங்களிலே இருக்கின்ற பெண்களில் கல்வி அறிவு குறைந்தவர்களை ஏமாற்றி போலியான ஆவணங்களில் கையொப்பம் இட்டு அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்ற போலி முகவர்கள் .

மூன்றாவதாக அதிகூடிய வட்டிக்கு பணத்தை வழங்கி மக்களை சுரண்டி கொண்டிருக்கின்ற பண முதலைகள் .

இந்த மூன்று வர்க்கத்தினாலும் இந்த மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் இருந்து மீண்டு கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள் .

இந்த மாவட்டம்  35  -  40  வருடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டம் , சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாவட்டம் .

அதேபோல வெள்ளத்தினாலும் , வறட்சியினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற மாவட்டம் .

இயற்கை செய்கின்ற துரோகத்தோடு சேர்ந்து இங்கு இருக்கின்ற ஒரு சிலர் செய்கின்ற துரோகத்தோடு சேர்ந்து இந்த ஏழை மக்கள் தங்களுடைய வாழ்வில் இருந்து மீளமுடியாமல் தடுமாரிக் கொண்டிருக்கின்றார்கள் .

இங்கேதான் அரச வங்கிகளாகிய ,மக்கள் வங்கி , இலங்கை வங்கி போன்றவர்கள் அர்ப்பணிப்போடு சேவை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது .

எனவே அதைத்தான் நாங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் . சர்வதேச ரீதியாக பேசப்படுகின்ற , கேட்கப்படுகின்ற பல விடயங்கள் இந்த
மாவட்டத்திலே இந்த மக்களிடையே இருக்கின்றன , அவற்றிக்கான விடைகளை நாங்கள் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம் .

எனவே தான் இந்த நிகழ்வு மிக முக்கியமானது இதிலே ஈடுபடுகின்ற அனைத்து சுயதொழில் முயற்சியாளர்களும் இங்கு ஆதரிக்கப்பட்டு ,நிலை நிறுத்தப்பட்டு நிரந்தரமான ஒரு வருமானம் ஈட்டுபவர்களாக மாற்றப்பட வேண்டும் .

அது தான் நாங்கள் எதிர் பார்கின்ற ஒரு விடயம் , எனவே இந்த சந்தர்ப்பத்திற்காக உண்மையாக இலங்கை வங்கியின் அனைத்து முகாமையாளர்களுக்கும் , அனைத்து சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கும்  நன்றிகள் தெரிவித்து  தெரிவித்துக்கொண்டார் .

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட மித்துரு பக்மகா பொல  சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை  மற்றும்  கண்காட்சியின்  

இன்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில்  சிறப்பு அதிதிகளாக இலங்கை வங்கி  உற்பத்தி மற்றும் அபிவிருத்தி  உதவி பொது முகாமையாளர் டப்ளியு .எ .எம் .திசேரா , கிழக்கு மாகான உதவி பொது முகாமையாளர் சிறில் பண்டார , சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் கே .ஆனந்தநடேசன் , சிரேஷ்ட முகாமையாளர்  எம் .ஐ .நவ்பீல் ,பிராந்திய முகாமையாளர்  கிருஷ்ணமூர்த்தி , உற்பத்தி மற்றும் அபிவிருத்தி  பிரதி பொது முகாமையாளர் செனரத் பண்டார  , மதகுருமார்கள் ,வங்கி அதிகாரிகள் , மித்துரு அபிவிருத்தி சங்கம் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் .
































.