மட்டக்களப்பு மாவட்ட பால் பண்ணையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு

மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட பால்பண்ணையாளர்களின் ஒன்றுகூடலும் ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பால் பண்ணையாளர்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டின்போது பால்பண்ணையாளர்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மில்கோ நிறுவனத்தின் உதவி தலைவர் பாலித சமரக்கோன், பொதுமுகாமையாளர் பி.ஐ.ஓ.பெர்னான்டோ,அபிருத்தி முகாமையாளர் பியரட்ன உட்பட மில்கோ நிறுவன அதிகாரிகள்,பிரதியமைச்சரின் செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பால்பண்ணையாளர்களில் 75வயதினை பூர்த்திசெய்த பால்பண்ணையாளர்கள் சித்திரைப்புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் தலா 50ஆயிரம் ரூபா வீதம் 22பேருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் பண்ணையாளர்களின் பிள்ளைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட பரிசுகள் வழங்கப்பட்டதுடன் குழந்தைப்பேறு மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவி நிதிகள் வழங்கப்பட்டதுடன் பால்பண்ணையாளர்களுக்கு பால் சேகரிக்கும் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.