இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகள் ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்கு

(லியோ)

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தினால்,குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகள் ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை  நாடளாவியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
.இந்த விழிப்புணர்வு கருத்தரங்கானது  சிறைச்சாலை இருக்கின்ற கைதிகள் . சிறைச்சாலைகளில்  இருந்து விடுதலையானவர்கள், பாடசாலை மாணவர்கள் ,சமூக மத்தியில்  மற்றும் குடும்ப சூழலில் வாழபவர்கள் விடயத்தில் கவணம் செலுத்தி மாணவர்களின் கல்வியிலும்  சமூக மத்தியில் வாழபவர்கள் சிறைகளுக்கு  செல்வதனை தடுப்பதற்கான  ஆலோசனைகளும் வழங்கி வருகிறது .


இந்த  விழிப்புணர்வு  கருத்தரங்குகளை   இலங்கை சிறைச்சாலை ஐக்கியம்  தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மட்டத்தில்  நடைமுறை படுத்தி வருகின்றனர் .

இதன் ஒரு விழிப்புணர்வு  நிகழ்வு இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின்  மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு கருவப்பங்கேணி   விபுலானந்த கல்லூரியில்  அதிபரின் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .


இந்நிகழ்வில் இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தின் மட்டக்களப்பு ,அம்பாறை பிராந்திய தேசிய இயக்குனர் ஜெயராஜ் , தலைவர் . தயாசீலன் , சிறைச்சாலை ஐக்கிய  குழுவின் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர் ,ஆசிரியர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .