சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்பின் ஒன்றியம் ஏற்பாட்டில் இலவச மூக்குகன்னாடிகள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்பின் ஒன்றியம்  ஏற்பாட்டில்  எகெட் கரிதாஸ் நிறுவன அனுசரணையில் எகெட் கரிதாஸ் நிறுவன  இயக்குனர் அருட்பணி ஜெரோம் டிலிமா  தலைமையில்  ஹெல்ப் ஏஜ் ஸ்ரீ லங்கா நடமாடும் கண் வைத்திய பிரிவினால்  சிரேஷ்ட பிரஜைகளுக்காண   இலவச  கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது .



இதன் போது கண் பார்வை  குறைபாடுகள்   தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு    தேவையானவர்களுக்கு   இலவச மூக்குகன்னாடிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது .


அவ்வாறு கண் பரிசோதனைகள்  செய்யப்பட்டு  கண் பார்வை குறைபாடுகள்  தொடர்பாக இனம் காணப்பட்டு தெரிவு செய்யப்பட   சிரேஷ்ட பிரஜைகளின் ஹெல்ப் ஏஜ் ஸ்ரீ லங்கா நடமாடும் கண் வைத்திய பிரிவினால்  இலவச மூக்குகன்னாடிகள் வழங்கும் நிகழ்வு  இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில்  இடம்பெற்றது .