மண்முனை வடக்கு சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு இடம்பெற்றது .



மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வும்   “ தடைகளே படிகளாக ‘ எனும் மலர் வெளியீடும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி .பி .எஸ் .எம் .சார்ள்ஸ் ,  கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச  செயலாளர்  எஸ் . யோகராஜா , மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி   , கெமிட்  நிகழ்ச்சித்திட்ட இயக்குனர்  கே . காண்டீபன், எல் .ஒ .எச் . பணிப்பாளர்  டேவிட் , ஹென்டிக்கப்  நிறுவன  திட்ட முகாமையாளர்  கிறிஸ்டி சந்திரகாந்த்   ஆகியோர் கலந்துகொண்டனர்


 இடம்பெற்ற    நிகழ்வில் போது மாற்றுத்திரனாளிகளுக்கான  வாழ்வாதார ஊக்குவிப்பு தொகையும் மாணவர்களுக்கான  கல்விக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது .



இந்நிகழ்வில்  தரிசனம், வாழ்வோசை,ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்களும் ,ஆசிரியர்களும்  கலந்துகொண்டனர் .