சர்வதேச மனித உரிமை தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது

(லியோன்)


சர்வதேச மனித உரிமைத் தினத்தை முன்னிட்டு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்  மனித உரிமை தின நிகழ்வுகள்  மட்டக்களப்பு கல்லடியில்  இடம்பெற்றது .


சர்வதேச மனித உரிமைத் தினத்தை முன்னிட்டு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்  மனித உரிமை தின நிகழ்வுகள்   மட்டக்களப்பு  கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்  .சி . . அசிஸ் தலைமையில்  இடம்பெற்றது .

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக   மட்டக்களப்பு  கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகப் பணிப்பாளர்  பேராசிரியர்  அம்மன்கிளி முருகதாஸ்  கலந்துகொண்டார் .

 இந்நிகழ்வில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்  .சி . . அசிஸ் உரை ஆற்றுகையில்  அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் மனிதனின் கெளரவம் பற்றி கூறப்படுகின்றது .

மனித  உரிமை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் சட்ட உதவிகளை  பெற்றுக்கொள்ள   சம்பந்தப்பட்ட  அதிகாரிகளை  நாடி வரும்போது மக்களுக்கு செய்ய வேண்டிய கடைப்பாடுகளை அரச நிருவாக நிறைவேற்று துறையினர் தமது கடமைகளை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் 1996ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைவாக அந்த முறைப்பாடுகளை பதிவு செய்து ,விசாரணைகளை செய்து அந்த சேவையை வழங்காது விட்டமைக்காக அந்த உரிய நபருக்கு பரிகாரங்களை பெற்றுக்கொடுக்கப் படுவதாக இலங்கை மனித ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் குற்றம் இழைக்கப்பட்டவருக்கு தண்டனை  வழங்கப்படும் .

இந்த   விடயங்களில் மனித உரிமைகள்  பற்றி கூறப்படுகின்ற  விடயங்களை   எவரும் பங்குபோட்டு பிரிக்க முடியாது ஒரு நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்மனித உரிமைகள் மீறப்பட்டால்   அவ்விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது  அதன் மூலம் பாதிக்கப்பட்டவர் பரிகாரம் பெறமுடியும் என் தெரிவித்தார் .

மட்டக்களப்பு  கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில்  இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைத் தின நிகழ்வில் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .இந்நிகழ்வின் போது  மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.