மட்டக்களப்பு மாநகரசபையினால் கழிவுப்பொருட்களினால் செய்யப்பட்ட 42 அடி நீளமான கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் நத்தார் பண்டிகையினை கொண்டாடும் வகையில் தயாராகிவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 42 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் நேற்று வியாழக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.

கழிவுப்பொருட்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒளியூட்டப்பட்ட இந்த நத்தார் மரம் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று இரவு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் எஸ்.செல்வராசா உட்பட வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்களும் கலந்துகொண்டனர்.