2016ஆம் ஆண்டு தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய ஆண்டாக அமையும் -எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர்

2016ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்குமென எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தினைபொறுத்தவரையில் மிக முக்கியமான மாவட்டம்.யாழ் மாவட்டத்துக்கு அடுத்ததாக தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமாகும்.வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக இருப்பது திருகோணமலை மாவட்டமாகும்.

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேன்.இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாத பல செயற்பாடுகள் நடைபெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.அதற்கான நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

தமிழர்களின் பிரச்சினை இன்று உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல இன்று சர்வதேச பிரச்சினையாகும்.முன்னொருபோதும் இல்லாத அளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்படவேண்டும் என ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல நாடுகள் செயற்படுகின்றன.உண்மை நிலை உணரப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும் எஇவ்வாறான சம்பவங்கள் இனிஒருபோதும் நடைபெறக்கூடாது என்பது தொடர்பில் சர்வதேசம் உறுதியாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.எமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பேசித்தீர்;த்துக்கொள்ளமுயலவேண்டும்.