கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பன்மைத்துவ கலாசார நிகழ்வு - 2015


கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பன்மைத்துவக் கலாசார நிகழ்வு 2015.12.29 அன்று திருமலை சென் மேரிஸ் தேசிய பாடசாலை கலையரங்கில் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளா் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுனா் கௌரவ ஒஸ்ரின் பெணான்டோ மற்றும் கல்வி பண்பாட்டலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சா் கௌரவ தண்டாயுதபாணி, காணி காணி அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சா் திருமதி ஆரியவதி கலப்பதி மற்றும் மாகாண சபை உறுப்பினா்கள், மாகாண பிரதம செயலாளா், பிரதிப் பிரதம செயலாளா், அமைச்சுக்களின் செயலாளா்கள், திணைக்களங்களின் உயரதிகாரிகள், கணக்காளா்கள், என அனைத்துவகைப்பட்ட அதிகாாிகளின் பிரசன்னத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

கிழக்கு மாகாண வரலாற்றில் சகல இணங்களையும் பிதிநிதித்துவப்படுத்தி அவா்களின் ஒற்றமைக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை ஆளுனா் மற்றும் மாகாண அமைச்சா்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் கவா்ந்ததோடு மட்டுமல்லாது அவா்களின் உரைகளில் வெகுவாகப் பாராட்டப்பட்டமையையும் காணக் கூடியதாக அமைந்தது.

மேலும் இந்நிகழ்வினை திறம்பட திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்மைக்காக பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாரை ஆளுனா் முதல் அனைவரும் பாராட்டியதும் விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் பல்லின கலாசார நிகழ்வுகளை கிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவன மாணவா்கள், விரிவுரையாளா்கள், மற்றும் கந்தளாய் பாடசாலை, திருமலை பாரதி பாடசாலை மாணவா்கள் அனைவரும் இணைந்து வழங்கியிருந்தனா்.

இறுதியில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு விருந்துபசாரம் அளிக்கப்பட்டு இந்நிகழ்வு நிறைவு பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். நல்லிணக்கத்தினை நோக்கியதான கலாசார நிகழ்வுகளின் ஊடான இவ்வளிக்கை காலத்தின் தேவைக்கு விருந்தாக அமைந்திருந்தது.
தகவல்- ஆ..பிரபாகரன் (கலாசார உத்தியோகஸ்தர் - நாவிதன்வெளி)