மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிறிஸ்தவ குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் உரிமையையும் அவர்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தி அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் .
இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் முறக்கொட்டாசேனை .எ .ஒ .ஜி . திருச்சபை மக்களும் ஊழியர்களும் , புனித பவுல் ஆலய மக்களும் குருக்களும் ,சிறுமந்தை ஆலய சபை மக்களும் ஊழியர்களும் , கிரான் மெதடிஸ்த திருச்சபை மக்களும் குருவானவர்களும் , கிறிஸ்தவ அறுவடை சபை ஊழியர்களும் சபை மக்களும் , வேதாகமத் திருச்சபை மக்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர் .