மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணபதி நகர் ரமேஷ்புரத்தில் வயோதிபத் தாயின் மீது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து படுமோசமாகத் தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
58 வயதான லலிதா அருமைத்துரை எனும் வயோதிபப் பெண்ணே தாக்கப்பட்டுள்ளார்.
தனது தாய் தனது சகோதரனால் தாக்கப்பட்டமை பற்றி முறைப்பாடு தெரிவித்துள்ள அருமைத்துரை வினோதினி (வயது 30) கூறியதாவது, சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான எனது சகோதரன் சுவேந்திரன் (வயது 32) உடனடியாக எனது வீட்டுக்குள் புகுந்து எனது தாய் தனியாக இருந்த வேளையில் தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
கோயிலுக்குச் சென்றிருந்த நான் வீடு திரும்பிய போது தாய் இரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார்.
உடனடியாக தாயை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.” எமது தாயைத் தாக்கிய எனது சகோதரன் தாக்குதலுக்கு உதவியாக மேலும் மூவரை அழைத்துக் கொண்டு வந்து தாயைத் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.