கொக்கட்டிச்சோலையில் விபத்து இருவர் படுகாயம் -நேரடிக்காட்சி பதிவு இணைப்பு

மழை காலங்களில் பாதசாரிகளின் கவலையீனம் காரணமாக விபத்துகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயற்படுவோரினால் வீதியில் செல்வோர் விபத்துகளில் சிக்குவது கவலைக்குரிய விடயமாகவே இருந்துவருகின்றது.

அவ்வாறு வீதியில் கவலையீனமாக சென்ற பாதசாரியினால் இன்று முற்பகல் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்து எமது செய்தியாளரின் கமராவில் பதிவாகியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிக்சோலை பொலிஸ் பிரிவுக்குட்கட்ட கொக்கட்டிச்சோலை நகரில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியில் கடும் மழை பெய்துவந்தநிலையில் கொக்கட்டிச்சோலை தபாலகத்துக்கு முன்பாக பஸ்ஸில் இறங்கி தபாலகத்துக்கு செல்ல முனைந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முனைக்காட்டை சேர்ந்த பெண்ணும் கடுக்காமுனை நீர்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்தவரும் படுகாயமடைந்து மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கவலையீனமாக வீதியை கடக்கமுற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஸ்தலத்துக்கு வந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.